சுடச்சுட

    
    raja

    பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கொள்கை முரண்பாடு உடையது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்தார்.

    சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பா.ஜ.க தலைமையில் அமைந்துள்ள கூட்டணி கொள்கையற்ற ஒரு முரணான கூட்டணியாகும். தேர்தலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள ஏற்பட்ட கூட்டணி. அதில் உள்ள கட்சிகள் தனித்தனி கொள்கைகள் கொண்டவை. பா.ம.க-வின் கொள்கைகளை விஜயகாந்தும், மதிமுக கொள்கைகளை பா.ஜ.க-வும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே சாதகமானவை. காங்கிரஸின் கொள்கை, நாட்டு நலனுக்கு எதிரானது. பா.ஜ.க. வை பொருத்தவரை மோடி அலை வீசுகிறது என்று மோடியே பிரகடனப்படுத்துகிறார். மக்கள் தங்களுக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள் என்று அவரே பேசுகிறார்.

    காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும். பா.ஜ.க. ஆட்சிக்கு வராமல் தடுக்கப்பட வேண்டும்.

    மூன்றாவது அணி, நான்காவது அணி என ஊடகங்கள்தான் சொல்கின்றன. அப்படியொன்றும் கிடையாது.

    இடதுசாரி கட்சிகளை பொறுத்தவரை காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கைகளுடைய சக்திகளை ஒன்றிணைத்து புதிய அணி உருவாக்க முயற்சி எடுக்கிறது.

    இந்தமுயற்சி தேர்தலுக்கு முன்னும், தேர்தலுக்கு பின்னும் தொடரும் என்றார் டி.ராஜா.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai