சுடச்சுட

  
  premlatha_vijayakanth

  தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று நரேந்திரமோடி பிரதமராக வருவார்; அந்த அரசில் அங்கம் வகிக்கப்போவது தேமுதிகதான் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

  விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அவர் பிரசாரத்தின்போது பேசியது:

  அதிமுக, திமுக அணிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். தற்போது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரே கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணிதான். தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசும்போது மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி உருவாக வேண்டும் என்று கூறுகிறார்.

  தேமுதிக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திரமோடி பிரதமராக வருவார். நாங்கள்தான் அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கப் போகிறோம்.

  தேமுதிக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகுதான், இம்மாவட்டத்தில் நந்தன்கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

  இவர் திண்டிவனம், திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலை, விக்கிரவாண்டி, காணை, கெடார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது தேமுதிக, பாமக, மதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai