சுடச்சுட

    
    g

    தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு திமுக, அதிமுகவே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    மின்சாரப் பிரச்னையை தீவிரமாக கவனித்து வருகிறேன். மின்சாரத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும் என தேர்தல் பிரசாரத்தின்போது மதுரையில் முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.

    கோடையின் உக்கிரம் தொடங்கியுள்ள நிலையில் மின்வெட்டு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், இதுகுறித்து கவலைப்படாதீர்கள் என முதல்வர் ஆறுதல் வார்த்தைகளை கூறி வருகிறார்.

    கடந்த இரு நாள்களுக்கு முன்பு நான் கோவை சென்றிருந்தபோது அங்கு நான்கு மணிநேர மின்வெட்டு இருந்தது. சென்னை தவிர தமிழகம் முழுவதும் இதே நிலைதான்.

    இந்தியாவுக்கு அதிகமான அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் தொழில் நகரம் திருப்பூர். மின்வெட்டால் இங்கு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டால் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    2001 முதல் 2011 வரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான மின்திட்டங்களும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த 10 ஆண்டுகளில் திமுகவும், அதிமுகவும் தான் மாறிமாறி ஆட்சியில் இருந்தன.

    ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்திக்காக எதுவும் செய்யாமல் இப்போது மின்வெட்டு வந்ததும் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொள்கின்றனர்.

    2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு மின்வெட்டு முக்கியக் காரணமாகும். தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளே காரணம்.

    காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் கடைபிடித்த பொருளாதாரக் கொள்கைகளும் மின்வெட்டுக்கு காரணம். எனவே, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் மின்வெட்டுக்கான உண்மையான காரணத்தை சொல்லாமல் தட்டிக் கழிக்கின்றன. தேமுதிக தலைமை இதுகுறித்து மூச்சுவிடுவதில்லை.

    எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் மாற்றுக் கொள்கையோடு வரும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்று ஜி.ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai