சுடச்சுட

  

  அரக்கோணம் தொகுதியில் ஏப்ரல் 8ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசப் போவதாக அரக்கோணம் போலீஸ் டிஎஸ்பிக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இக்கடிதத்தை அனுப்பியவர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோ.அரியை ஆதரித்து, ஏப்ரல் 8ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்யவுள்ளார். இதற்காக வாலாஜாபேட்டையை அடுத்த அம்மூர் அருகே பிரம்மாண்ட கூட்டத்துக்கு அதிமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். முதல்வர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து இறங்க ஹெலிபேட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில் அரக்கோணம் டிஎஸ்பி கண்ணப்பனுக்கு சனிக்கிழமை ஒரு கடிதம் வந்தது. அதில், "வரும் ஏப்ரல் 8ம் தேதி அரக்கோணம் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவுள்ள பிரசாரக் கூட்டத்தில் சீதாபதி, சீதாராமன், முருகேசன், வெங்கடேசன், இந்திரா ஆகியோர் கூட்டு சேர்ந்து வெடிகுண்டு வைத்து தகர்க்க உள்ளனர் எனவும், இதை எழுதியவர் கங்காதரன், கல்யாண மண்டபத் தெரு, ஜோதி நகர், அரக்கோணம்' எனவும் எழுதப்பட்டிருந்தது.

  இக்கடிதம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபுவுக்கு உத்தரவிட்டு அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

  ஏற்கெனவே இதே பெயர்களுடன் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தில் அரக்கோணம் ரயில் நிலையம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என திலகவதி எனும் பெண் கடிதம் எழுதியிருந்தார். அப்போது இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தியபோது தன்னுடைய குடும்பச் சொத்துப் பிரச்னைக்காக இவ்வாறு கடிதம் எழுதியதாக வாக்குமூலம் அளித்ததை அடுத்து அவரை போலீஸார் எச்சரித்து விடுவித்தனர்.

  இந்நிலையில் இதே குடும்பத்தில் இருந்து மீண்டும் தற்போது முதல்வர் கூட்டத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai