54 பேரவைத் தொகுதிகளில் திமுகவை 3-வது இடத்துக்குத் தள்ளிய பாஜக கூட்டணி

நடந்து முடிந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் 54 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணியை, பின்னுக்குத்தள்ளி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாதனை படைத்துள்ளது.

நடந்து முடிந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் 54 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணியை, பின்னுக்குத்தள்ளி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாதனை படைத்துள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக கூட்டணி, காங்கிரஸ், இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி ஏற்பட்டது. ஆனாலும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக சாதனை படைத்துள்ளது. கன்னியாகுமரியில் பாஜகவும், தருமபுரியில் பாமகவும் வெற்றி பெற்றது.

தமிழகத்தில் அதிமுகவுக்கு அடுத்து மிகப்பெரிய கட்சியான திமுக, இந்தத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிமுக 44.3, திமுக கூட்டணி 26.8, பாஜக கூட்டணி 18.5, காங்கிரஸ் 4.3, இடதுசாரிகள் 1, ஆம் ஆத்மி கட்சி 0.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன.

இடதுசாரிகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைவிட நோட்டாவுக்கு அதிகமாக அதாவது 1.4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

217 பேரவைத் தொகுதிகளில் அதிமுக முதலிடம்: மக்களவைத் தேர்தல் முடிவுகளை சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக கணக்கிட்டால் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 7 தொகுதிகளில் பாஜகவும், தருமபுரி, பாலக்கோடு, பெண்ணாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 தொகுதிகளில் பாமகவும், கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், பாளையங்கோட்டை, திருவாரூர், ஆத்தூர், கூடலூர் ஆகிய 4 தொகுதிகளில் திமுகவும், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முதலிடத்தைப் பிடித்துள்ளன. மற்ற 217 தொகுதிகளிலும் அதிமுக முதலிடத்தைப் பெற்றுள்ளது.

திமுகவை பின்னுக்குத் தள்ளிய பாஜக கூட்டணி: இந்தத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்துத்துள்ள திமுக, 4 இடங்களில் முதலிடத்தையும், நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 4 தொகுதிகளில் 4-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

தருமபுரி, கோவை, வேலூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் உள்ள 18 பேரவைத் தொகுதிகளிலும் திமுக 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது தவிர, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் (புதிய தமிழகம்), ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, சாத்தூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், ஜெயங்கொண்டம் (விடுதலைச் சிறுத்தைகள்), மண்ணச்சநல்லூர், முசிறி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், காங்கேயம், எடப்பாடி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, சோளிங்கர், விருகம்பாக்கம், தியாகராய நகர், வேளச்சேரி, பெருந்துறை, பவானி, அந்தியூர் என மொத்தம் 54 பேரவைத் தொகுதிகளில் திமுக 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

1977-க்குப் பிறகு அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழக அரசியல் களம் மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்துள்ளதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதிமுக தனது செல்வாக்கை அதிகரித்துள்ள நிலையில் திமுக தனது வாக்கு வங்கியை இழந்திருப்பதும், பாஜக கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதும் தமிழக அரசியல் களத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com