சுடச்சுட

  
  dmdk_bjp

  உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது பாஜக மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் எஸ். மோகன்ராஜூலு, தேமுதிக தலைமை அலுவலகச் செயலாளர் பார்த்தசாரதி, மாநிலப் பொருளாளர் இளங்கோவன், கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறது.

  மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் தமிழக பாஜக தலைவர்கள் தமிழிசை, மோகன்ராஜூலு ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என வைகோ அறிவித்தார்.

  பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, தமிழக பாஜக தலைவர்கள் தமிழிசை, மோகன்ராஜூலு ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். இது குறித்து தமிழிசையிடம் கேட்டபோது, விஜயகாந்தை சந்தித்து உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு கோரினோம். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஓரிரு நாளில் முடிவு தெரிவிப்பதாககக் கூறினார். பாமக தலைவர்களையும் சந்திக்க முயற்சி செய்து வருகிறோம். அவர்களும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai