Enable Javscript for better performance
கோவை மாநகராட்சி மேயர் தேர்தல்: முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாநகராட்சி மேயர் தேர்தல்: முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம்

    By dn  |   Published on : 14th September 2014 10:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya2

    கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமாரை ஆதரித்து, கோவை வ.உ.சி. மைதானத்தில் திங்கள்கிழமை (செப்.15) நடைபெறும் பொதுக் கூட்டத்தில், அக் கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பேசுகிறார்.

    கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் ப.ராஜ்குமார், பாஜக-வில் ஆர்.நந்தகுமார், மார்க்சிஸ்ட் கட்சியில் சி.பத்மநாபன் உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதில், அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமாரை ஆதரித்து கோவை வ.உ.சி. மைதானத்தில் திங்கள்கிழமை மாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பேசுகிறார்.

    இதற்காக, தனி விமானம் மூலம் திங்கள்கிழமை (செப்.15) மாலை 4.15 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா கோவை வருகிறார். அவருக்கு, விமான நிலையத்தில் கோவை மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    அங்கிருந்து காரில் புறப்பட்டு, வழியில் அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.

    சிறப்பு மலரையும் அவர் வெளியிட உள்ளார். பின்னர், அங்கிருந்து வ.உ.சி. மைதானத்திற்குச் சென்று பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

    அதன் பிறகு, விமான நிலையம் சென்று தனி விமானத்தில் சென்னை செல்கிறார். முதல்வரின் வருகையையொட்டி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai