Enable Javscript for better performance
சிங்கப்பூர் எழுத்தாளர், மலேசிய கவிஞருக்கு கரிகாலன் விருதுகள்- Dinamani

சுடச்சுட

    

    சிங்கப்பூர் எழுத்தாளர், மலேசிய கவிஞருக்கு கரிகாலன் விருதுகள்

    By dn  |   Published on : 14th September 2014 10:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிங்கப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், சிங்கப்பூர் எழுத்தாளர் சூர்யரத்னா, மலேசியக் கவிஞர் பச்சைபாலன் ஆகியோருக்கு கரிகாலன் விருதுகளை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.திருமலை வழங்கினார்.

    முஸ்தபா தமிழ் அறக்கட்டளை சார்பில், வெளிநாடு வாழ் இலக்கியப் படைப்பாளிகளுக்காக நிறுவப்பட்ட இந்த விருதுகளுக்கு உரிய படைப்புகளை ஆண்டுதோறும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டு தமிழ்க் கல்வித் துறை தேர்வு செய்து வருகிறது.

    விழாவில், வளர் தமிழ் இயக்கத் தலைவர் ராஜாராம் பேசியபோது, தமிழ், எல்லை கடந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என எங்கெங்கும் தமிழ் முழங்கி வருகிறது. தமிழை அடுத்த தலைமுறையினரிடம் எந்த நிலையில் ஒப்படைக்கப் போகிறோம் என்பதுதான் நமது கவலை என்றார்.

    இலங்கை பேராசிரியர் வ.மகேஸ்வரன், விருது பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் குறித்த மதிப்புரையை வழங்கினார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் ராஜேந்திரன், அறக்கட்டளை நிறுவனர் முஸ்தபா உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai