Enable Javscript for better performance
99 அடியாகக் குறைந்தது மேட்டூர் நீர்மட்டம்- Dinamani

சுடச்சுட

    
    water_life

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 99.80 அடியாகக் குறைந்தது.

    காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 7,542 கன அடியாகக் குறைந்தது. இந்த நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறந்துவிடப்படும் நீரின் அளவு நொடிக்கு 23 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வந்தது.

    இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 100.32 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், மாலையில் 99.80 அடியாகக் குறைந்தது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் 8-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. 37 நாள்களுக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் 100 அடிக்குக் கீழாகக் குறைந்துள்ளது. நீர்மட்டம் 100 அடிக்குக் கீழாகக் குறைந்ததால், அணையின் 16 கண் பாலத்தில் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    நீர்வரத்து சரிவு: தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை நீர்வரத்து நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்தது.

    கடந்த இரு நாள்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலத்தில் இருந்து உபரிநீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டதால், ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து நொடிக்கு 19 ஆயிரம் கன அடி வரை அதிகரித்தது. இந்த நிலையில், தற்போது நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai