Enable Javscript for better performance
இடம்பெயரும் இரு மாடிக் கட்டடம்!- Dinamani

சுடச்சுட

    
    demolish

    பொன்னேரி அருகே இரு மாடிக் கட்டடம் நவீன தொழில்நுட்பம் மூலம் சுமார் 80 அடி பின்னோக்கி நகர்த்தப்பட்டு வருகிறது.

    நான்கு வழிப் பாதையாக உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாதவரத்தில் இருந்து தடா வரை சுமார் 50 கி.மீ. தொலைவு ஆறு வழிப்பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இதில் செம்புலிவரத்தில் இருந்து சோழவரத்துக்குச் செல்லும் பகுதியில் மேம்பாலம் அமைய உள்ளது.

    இந்த நிலையில், செம்புலிவரத்தைச் சேர்ந்த பார்த்தீபனுக்குச் சொந்தமான 7,800 சதுர அடியில் இரு தளங்கள் கொண்ட வணிக வளாகக் கட்டடம் அமைந்துள்ளது. இதில் முதல் தளத்தில் 12 கடைகளும், இரண்டாவது தளத்தில் 12 கடைகள் என மொத்தம் 24 கடைகள் உள்ளன.

    இந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக வணிக வளாகத்தை இடிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது. வணிக வளாகம் கட்டி ஆறு ஆண்டுகளே ஆன நிலையில், அதை இடிக்க உரிமையாளருக்கு மனம் வரவில்லை.

    இதையடுத்து, "பில்டிங் ஷிப்டிங் டெக்னாலஜி' எனும் நவீன தொழில் நுட்பம் மூலம் கட்டடத்தின் அடியில் ஜாக்கிகளைப் பொருத்தி அதனை நகர்த்தும் தொழில் நுட்பத்தை கேட்டறிந்தார். இதுகுறித்து ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த எம்.சி.எம்.டி. என்ற கட்டுமான நிறுவனத்தின் உதவியுடன், கட்டடத்தை பின்னோக்கி நகர்த்தும் பணிகளை மேற்கொண்டார். கட்டடத்தைப் பின்னோக்கி நகர்த்துவதற்காக 460 ஜாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்டடத்தின் பின் பகுதியில் பவுன்டேஷன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணி முடிவடைந்ததும். முழுமையாக கட்டடத்தை நகர்த்தி அதன் மேல் வைக்க முடியும். பல லட்சம் ரூபாய் இதற்காகச் செலவு செய்யப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai