Enable Javscript for better performance
இந்தியா - பிரான்ஸ் நாடுகளின் விண்வெளி ஆய்வு ஒத்துழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்தியா - பிரான்ஸ் நாடுகளின் விண்வெளி ஆய்வு ஒத்துழைப்பு

    By dn  |   Published on : 17th April 2015 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    release

    விண்வெளி ஆய்வில் இந்திய- பிரான்ஸ் நாடுகளின் 50 ஆண்டுகால ஒத்துழைப்பை நினைவுகூரும் வகையில், சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழா புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் நாட்டு துணைத் தூதரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்தியாவின் இஸ்ரோ மற்றும் பிரான்ஸ் நாட்டின் சி.இ.என்.எஸ். அமைப்புகள் கடந்த 50 ஆண்டுகளாக விண்வெளித்துறையில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன. செயற்கைக்கோள்கள் அனுப்புதல், விண்வெளி ஆராய்ச்சி, கடல்சார் வளம் கண்டறிதல், இயற்கை பேரிடர் ஆய்வு மற்றும் விவசாய வளர்ச்சியில் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

    இதனை நினைவுகூரும் வகையில், கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஹொலந்தேவுடன் இணைந்து சிறப்புத் தபால் தலை வெளியிட்டார். இதனை ஒரே நேரத்தில் இந்தியா-பிரான்ஸ் நாட்டு தபால் துறைகள் வெளியிட்டன. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் சிறப்புத் தபால் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரான்ஸ் நாட்டுத் துணைத் தூதர் பிலிப் ஜானவியர் காமியாமா தலைமை தாங்கினார். முதல்வர் என்.ரங்கசாமி சிறப்புத் தபால் தலையை வெளியிட, சென்னை மண்டல தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர் பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர் பேசியதாவது:

    இந்த சிறப்புத் தபால் தலை அந்தந்த நாட்டு மொழிகளில் இடம் பெறும்.

    இதில், ரூ.25 மற்றும் ரூ.5 மதிப்புள்ள 2 சிறப்புத் தபால் தலைகள், அஞ்சல் குறுந்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. 9 லட்சம் தபால் தலைகளும், 1,000 குறுந்தாள்களும் விற்பனைக்கு அச்சிடப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் 60 சிறப்புத் தபால் தலை விற்பனையகங்களிலும், புதுவையிலும் கிடைக்கும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai