Enable Javscript for better performance
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை

    By dn  |   Published on : 17th April 2015 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முறைகேட்டில் ஈடுபட்ட சுங்கத் துறை அதிகாரிகள் மூவர் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

    இந்தத் துறைமுகத்தில் உள்ள பிஎஸ்ஏ சிகால் என்ற சரக்குக் கையாளும் நிலையத்தின் வழியே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மரத்தடிகளில் முறைகேடு நடைபெறுவதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை இரவு ரகசிய சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதிக பணத்துடன் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், மரத்தடிகள் ஏற்றுமதியின்போது சலுகை பெறுவதற்காக சுங்கத் துறை அதிகாரிகள் மூவருக்கு லஞ்சம் கொடுக்க பணம் வைத்திருந்ததாக அந்த இளைஞர் தெரிவித்தாராம்.

    இதையடுத்து சுங்கத் துறைக் கண்காணிப்பாளர், வெளிமாநிலத்தைச் சேர்ந்த இரு ஆய்வாளர்கள் என மொத்தம் மூவரிடம் சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, மூவரும் இதுவரை பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடு செய்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ, சுங்கத் துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ அதிகாரிகள் தங்களது உயர் அதிகாரிகளுக்கு அளித்த பிறகே, முறைகேடு தொடர்பாக மூவர் மீதும் நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai