Enable Javscript for better performance
பயணிகள் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - Dinamani

சுடச்சுட

    

    பயணிகள் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

    By dn  |   Published on : 17th April 2015 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடுத்தர, கனகரக பயணிகள் வாகனங்களில் வேகக் கட்டுப்பாடுக் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளாகி 20 பேர் உயிரிழந்தனர்.

    அதைத் தொடர்ந்து வழக்குரைஞர் காசிநாத பாரதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் அவர் கூறியது:

    ஆம்னி பேருந்துகளில் வேகக் கட்டுப்பாடுக் கருவி பொருத்தப்படாததால், அவர்கள் அதி வேகமாக பேருந்துகளை இயக்குகின்றனர்.

    பயணிகளிடம் அதிகக் கட்டணத்தை வாங்கினாலும், அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்வதில்லை. வேகமாக பேருந்துகளை இயக்குவதால் பேருந்து விபத்துக்குளாகிறது.

    அதனால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம், வேகம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினார்.

    இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், ஆறு வாரங்களில் ஆம்னி பேருந்துகளில் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும். அவ்வாறு பொருத்தாத ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது, மேலும், தேசிய நெடுஞ்சாலையில் 90 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது என உத்தரவிட்டது.

    நிலுவையில் இருந்த இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது போக்குவரத்துத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெருமளவு வாகனங்களில் வேகக் கட்டுப்பாடுக் கருவி அல்லது தற்போது நடைமுறையில் புதிதாக உள்ள வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, "நடுத்தர, கனரக பயணிகள் வாகனங்களில் வேகக் கட்டுப்பாடுக் கருவி அல்லது நடைமுறையில் உள்ள புதிய வகையிலான வேகக் கட்டுப்பாடுக் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai