Enable Javscript for better performance
மக்களின் குறைகளைக் கேட்க மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை- Dinamani

சுடச்சுட

    

    மக்களின் குறைகளைக் கேட்க மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை

    By dn  |   Published on : 17th April 2015 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bjp_min

    மத்திய அமைச்சர்கள் மே மாதம் முதல் தமிழக மக்களின் வீடு தேடி வந்து குறைகளைக் கேட்பார்கள் என்று மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

    திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில், பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள் விழா வியாக்கிழமை கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட பாஜக தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார்.

    இதில் தமிழகப் பொறுப்பாளரும், மத்திய மின் துறை அமைச்சருமான பியூஷ் கோயல் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். அதன் பிறகு, அவர் பேசியது:-

    தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது. இங்குள்ள தலைவர்கள் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றனர். தமிழக மக்களுக்கு நல்ல கல்வி, சுகாதாரம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மகளிருக்கு வலிமை, குழந்தைகளுக்கு நல்ல பயிற்சி ஆகியவற்றைத் தர வேண்டும். பாஜகவால் தமிழகத்துக்கு மாற்றம் வரும்.

    தமிழகத்தில் ஊழலை ஒழிப்போம். பெண்கள் சக்தி மிகப்பெரிய சக்தியாக ஓங்க வேண்டும். வீட்டில் முடங்கிக் கிடந்தால் எதையும் சாதிக்க முடியாது. வெளியே வந்து போராட வேண்டும். மதுவையும், ஊழலையும் வைத்துக் கொண்டு தமிழகத்தால் முன்னேறவே முடியாது.

    இந்திய மக்கள் 125 கோடி பேருக்கும் சமவாய்ப்புக் கொடுக்க பிரதமர் மோடி விரும்புகிறார். அனைவருக்கும் வீடு, நல்ல கழிப்பறை, 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் ஆகியவற்றைக் கொடுக்க அவர் விரும்புகிறார்.

    அடுத்த மாதம் முதல் மத்திய அமைச்சர்கள் உங்களை வீடு தேடி வந்து சந்திப்பார்கள். அவர்களிடம் உங்கள் குறைகளை நேரடியாகக் கூறலாம். மேலும், பாஜகவின் 42 மாவட்ட அலுவலகங்களும் சனிக்கிழமைதோறும் திறந்து இருக்கும். உங்கள் பிரச்னைகளை அவர்களிடம் எடுத்துக் கூறலாம். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நேர்மையான, வெளிப்படையான ஆட்சி நடைபெறும். தமிழகத்தில் நல்ல எண்ணமும், நேர்மையான உள்ளமும் கொண்ட அனைவரும் பாஜகவுடன் இணைத்து நல்ல அரசு அமைக்க முயற்சிக்க வேண்டும் என்றார் பியூஷ் கோயல்.

    விழாவில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    6 ஆயிரம் மெகாவாட்டுக்கு புதிய மின் திட்டங்கள்

     

    தென்னிந்திய மாநிலங்களில் மின் பற்றாக்குறையைப் போக்க புதிதாக 6 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய மின் அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

    சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிறகு, நிருபர்களிடம் அவர் கூறியது:

    தென் இந்தியாவின் மின் பற்றாக்குறையை நீக்க 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai