Enable Javscript for better performance
மீனாகுமாரி குழு பரிந்துரையை எதிர்த்து ஏப்ரல் 22-இல் தில்லியில் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மீனாகுமாரி குழு பரிந்துரையை எதிர்த்து ஏப்ரல் 22-இல் தில்லியில் போராட்டம்

    By dn  |   Published on : 17th April 2015 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டாக்டர் மீனாகுமாரி குழு பரிந்துரைகளை ரத்து செய்யக் கோரி ஏப்ரல் 22-ஆம் தேதி தில்லியில் போராட்டம் நடத்தப்படும் என தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா. இளங்கோ தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் புதுவையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

    இந்திய ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடித்தல் தொடர்பாக ஆராய்வதற்கு டாக்டர் மீனாகுமாரி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்கமிட்டியின் அறிக்கை இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடியதாக உள்ளது. இக்கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது. இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் நாட்டிலுள்ள 13 கடற்கரை மாநில மீனவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

    சிறு மீனவர்களின் சுமார் 2 லட்சம் மீன்பிடி கலங்கள், கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்களுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்படும். இதனால் மீனவர்களுக்கு இடையே பிரச்னைகளும், வருவாய் இழப்பும் ஏற்படும். பாரம்பரிய மீனவர்கள் வறுமையான சூழலுக்கு தள்ளப்படுவர்.

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மோடி அளித்த வாக்குறுதிப்படி மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 11 கடற்கரை மாநில மீன சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தில்லியில் வரும் 22-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai