Enable Javscript for better performance
மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்காவிடில் சிறை நிரப்பும் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்காவிடில் சிறை நிரப்பும் போராட்டம்

    By dn  |   Published on : 17th April 2015 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin

    மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால், திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் திமுகவில் இணையும் விழா கொட்டிவாக்கத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

    மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது: தமிழகம் முழுவதும் குடிநீர்ப் பிரச்னை இருக்கிறது. இதைப் போக்குவதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கோடைகாலம் என்றால் தண்ணீர் பிரச்னை வரத்தான் செய்யும். திமுக ஆட்சியிலும் இருந்தது. ஆனால், போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பிரச்னை தீர்க்கப்பட்டது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதற்காகவே வேலூர் குடிநீர்த் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    110-ஆவது விதியின் கீழ் நெமிலி அருகே கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப் போவதாகக் கூறினர். அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை. கிழக்கு கடற்கரை சாலையில் பேரூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவருவதாகக் கூறினார்ர்கள். அதையும் தொடங்கவில்லை. ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கருணாநிதி உள்பட அனைவரும் கண்டித்தனர். ஆனால் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டிக்கவில்லை. 3 நாள்களுக்கு பிறகு மென்மையாக ஓர் அறிக்கை வெளியிட்டார்.

    திமுக ஆட்சின்போது, சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்களைக் கொண்டு வந்தோம். மெட்ரோ ரயில் திட்டத்தையும் கொண்டு வந்தோம். அந்தப் பணிகளும் மந்தமாகச் செயல்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை உடனடியாக முடிக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai