Enable Javscript for better performance
வளி மண்டலச் சுழற்சி நீடிப்பு: இன்றும் மழை நீடிக்கும்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக வான் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்குச் சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் வெள்ளிக்கிழமையும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், குமரிக் கடல் - லட்சத்தீவுகளை ஒட்டியுள்ள பகுதியில் வளி மண்டல மேல் அடுக்குச் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் வெள்ளிக்கிழமையும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: வளி மண்டல மேல் அடுக்குச் சுழற்சி அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் வெள்ளிக்கிழமை மழை பெய்யும். உள் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டமாக இருக்கும்; சில இடங்களில் மழை பெய்யும் என்றனர்.

    வெள்ளிக்கிழமை காலை வரையிலான நிலவரப்படி, தேனி மாவட்டம்- பெரியகுளத்தில் 150 மி.மீ. மழையும், தரமணியில் 120 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

    தாராபுரம், அரண்மனைபுதூரில் 110 மி.மீ, மீனம்பாக்கம், திருமங்கலம், தேவக்கோட்டை, ஈரோட்டில் 100 மி.மீ. மழை பதிவானது.

    மேலும் தமிழகத்தின் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai