Enable Javscript for better performance
வார இதழ் மீது அமைச்சர் அவதூறு வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டது தொடர்பாக, வார இதழ் மீது மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் சார்பில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து தமிழ் வார இதழ் ஒன்றில் ஏப்ரல் 11-ஆம் தேதி செய்தி வெளியானது. அது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அந்தச் செய்தியை வெளியிட்ட வார இதழின் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai