Enable Javscript for better performance
கண்காட்சியகமான கலாம் வீடு- Dinamani

சுடச்சுட

    

    கண்காட்சியகமான கலாம் வீடு

    By dn  |   Published on : 24th August 2015 03:05 AM  |   அ+அ அ-   |    |  

    41

    ராமேசுவரத்தில் கலாம் பிறந்த வீட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியகத்தை இதுவரை 6 லட்சம் பேர் பார்த்துள்ளதாக அப்துல் கலாம் சகோதரரின் பேரன் ஆ.ப.ஜெ.மு.ஜெ.சலீம் கூறினார்.
     அப்துல் கலாம் எழுச்சி விழா கூட்டத்தில் ஆ.ப.ஜெ.மு.ஜெ. ஷேக் சலீம் பேசியது:
     கலாம் தன் குடும்பத்தின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். தனது தந்தை மறைவுக்குப் பிறகு அண்ணன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். எந்த ஊருக்குச் செல்வது என்றாலும் முன்கூட்டியே தன் அண்ணனிடம் கூறுவார். ஷில்லாங் செல்வது குறித்தும் கடந்த 24-ஆம் தேதி அவரிடம் கலாம் தெரிவித்தார்.
     குடியரசுத் தலைவர் ஆனபோது எங்கள் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் அனைவரையும் தனது சொந்தச் செலவில் அழைத்துச் சென்றார். கடந்த 2006-இல் குடும்ப உறுப்பினர்கள் 60 பேர் தில்லிக்கு மீண்டும் சென்றபோது, அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியிருந்ததற்கான வாடகை உள்ளிட்ட செலவுகள் அனைத்தையும் சொந்தப் பணத்தில் கொடுத்துவிட்டார்.
     அருங்காட்சியகம்: கடந்த 2010-இல் கலாம் பிறந்த வீட்டை மாற்றிக் கட்டினோம். அந்த வீட்டில் அரிய புகைப்படங்கள், ராக்கெட் மாதிரிகள் ஆகியவற்றை வைத்து கண்காட்சியகமாக மாற்றினோம். இதுவரை அந்த வீட்டை 6 லட்சம் பேர் வந்து பார்வையிட்டுள்ளனர்.
     எரிசக்தியில் நாடு தன்னிறைவு பெற வேண்டும் என்பதை பேச்சோடு நிறுத்தாமல், தனது சொந்த வீட்டிலேயே 6 கிலோ வாட் சூரிய மின்சக்தித் தகடுகளை நிறுவினார். அதுமட்டுமல்லாது, 1,200 மீனவக் குடும்பங்களுக்கு இலவச சூரிய மின்சக்தி உபகரணங்களைக் கொடுத்துள்ளார் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai