Enable Javscript for better performance
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உடல் உறுப்புகளை தானம் செய்யும் வசதி: சுகாதாரத் துறை செயலர்- Dinamani

சுடச்சுட

    

    அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உடல் உறுப்புகளை தானம் செய்யும் வசதி: சுகாதாரத் துறை செயலர்

    By DN  |   Published on : 27th January 2015 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை திங்கள்கிழமை பார்வையிட்ட பிறகு அவர் அளித்த பேட்டி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏதும் கிடையாது. ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோல், மாநிலம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வெளிமாநிலத்திலிருந்து வருவோரிடம் சோதனை நடத்தப்படுகிறது. மேலும், பன்றிக் காய்ச்சல் எளிதில் குணப்படுத்தக்கூடிய நோய்தான் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மாநிலம் முழுவதும் 1.5 லட்சம் தடுப்பு மாத்திரைகள் கைவசம் உள்ளன.

    மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானம் செய்வது அதிகரித்துள்ளது.

    இதுதொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் அதிகம் உள்ளதால் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உடல் உறுப்புகளை தானம் செய்யும் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai