Enable Javscript for better performance
ஆளுநர் தேநீர் விருந்து- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தினத்தையொட்டி, ஆளுநர் கே.ரோசய்யா அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், ராணுவம், கடற்படை, விமானப்படை அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கடந்த 2012, 2013 ஆம் ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக கொடி நாள் நிதி வசூல் செய்த மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளையும், வெள்ளிக் கேடயத்தையும் ஆளுநர் ரோசய்யா இந்த நிகழ்ச்சியில் வழங்கினார். திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன், சென்னை மாவட்ட ஆட்சியர் இ.சுந்தரவல்லி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களாக இருந்த எம்.சித்திரசேனன் (2012), கே.பாஸ்கரன் (2013), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கே.வீரராகவராவ் ஆகியோருக்கு இந்த கேடயங்கள் வழங்கப்பட்டன.

    குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த துறைகளுக்கும், கலை நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களுக்கும் பரிசுகளை ஆளுநர் வழங்கினார். ஆளுநர் அளித்த இந்த தேநீர் விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai