Enable Javscript for better performance
கூடங்குளம் முதல் அணு உலையில் இதுவரை 387 கோடி யூனிட் மின் உற்பத்தி: வளாக இயக்குநர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    கூடங்குளம் முதல் அணு உலையில் இதுவரை 387 கோடி யூனிட் மின் உற்பத்தி: வளாக இயக்குநர் தகவல்

    By DN  |   Published on : 27th January 2015 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வள்ளியூர், ஜன.26: கூடங்குளம் அணு மின் நிலைய முதல் அணு உலை மூலம் இதுவரை 387 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

    கூடங்குளம் அணு மின் நிலைய பணியாளர்கள் குடியிருப்பில் (அணு விஜய் நகரியத்தில்) அமைந்துள்ள ஏ.இ.சி. பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தலைமை தாங்கி தேசியக் கொடியேற்றி வைத்தார்.

    பின்னர் அவர், தேசிய தொழில் பாதுகாப்புப் படை, டெஸ்கோ, தீயணைப்பு படைவீரர்கள், மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேசியது:

    கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலை மூலம் இதுவரை 387 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில், கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி முதல்

    50 கோடி யூனிட் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது  என்றார்.

    விழாவில், ரஷிய சிறப்பு விஞ்ஞானிகள் குழுத் தலைவர் இவானிசவ் இவான், அணு மின் நிலைய இயக்குநர் எச்.என்.ஷாகு, முதுநிலை கட்டுமான பொறியாளர் பி.ஏ.பிள்ளை,

    தேசிய தொழில் பாதுகாப்புப் படை கமாண்டர் மணிசிங், துணைப் பொது மேலாளர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai