Enable Javscript for better performance
செந்தூர்பாண்டியன் பொறுப்பு வகித்த இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் காமராஜிடம் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    செந்தூர்பாண்டியன் பொறுப்பு வகித்த இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் காமராஜிடம் ஒப்படைப்பு

    By DN  |   Published on : 27th January 2015 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உடல் நலக் குறைவு காரணமாக, சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தூர் பாண்டியன் பொறுப்பில் இருந்த இந்து சமய அறநிலையங்கள் துறை, உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக முதல்வர் அளித்த பரிந்துரைக்கு ஆளுநர் கே.ரோசய்யா ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், அமைச்சர் காமராஜ் இனி, உணவு, இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

    உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தூர் பாண்டியன், இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என்று ஆளுநர் மாளிகையின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai