Enable Javscript for better performance
உலகத் தமிழ்ச் சங்க கட்டடத்தை வேறு இடத்தில் கட்டக் கோரி போராட்டம்: 60 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    உலகத் தமிழ்ச் சங்க கட்டடத்தை வேறு இடத்தில் கட்டக் கோரி போராட்டம்: 60 பேர் கைது

    By dn  |   Published on : 28th January 2015 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    madurai_protest

    உலகத் தமிழ்ச் சங்கத்தை வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரையில் தல்லாகுளம் கண்மாய் இருந்த இடத்தில் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியது: தல்லாகுளம் கண்மாய் கரைப் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இதுவரை பட்டா வழங்கவில்லை. எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இந்நிலையில் கண்மாய் இருந்த இடத்தில் உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ராஜாக்கூரில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இடம் ஒதுக்குவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தல்லாகுளம் பகுதியைச் சுற்றியே எங்களது வாழ்வாதாரம் இருப்பதால், இங்கிருந்து எங்களை வெளியேற்றக் கூடாது. இப்பகுதியிலேயே பட்டா வழங்க வேண்டும் என்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்திய போலீஸார், வருவாய்த் துறை அலுவலர்களிடம் மனு கொடுக்க அழைத்துச் சென்றனர். இருப்பினும் மாவட்ட ஆட்சியர் வரும் வரை காத்திருந்துக் கோரிக்கையை நேரில் தெரிவித்துவிட்டு செல்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். அதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 60 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai