Enable Javscript for better performance
கெலவரப்பள்ளி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கெலவரப்பள்ளி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

    By dn  |   Published on : 28th January 2015 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kelavarap

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணையில் இருந்து புதன்கிழமை (ஜன. 28) முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட உத்தரவு: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து இரண்டாம் போகப் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களது கோரிக்கையை ஏற்று, நீர்த்தேக்கத்தில் இருந்து புதன்கிழமை (ஜன. 28) முதல் தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai