Enable Javscript for better performance
கேரளத்தில் நிதியமைச்சர் பதவி விலகக் கோரி பந்த்: தமிழக வாகனங்கள் மாநில எல்லையில் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    கேரளத்தில் நிதியமைச்சர் பதவி விலகக் கோரி பந்த்: தமிழக வாகனங்கள் மாநில எல்லையில் நிறுத்தம்

    By dn  |   Published on : 28th January 2015 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள கேரள நிதியமைச்சர் பதவி விலகக் கோரி, மாநில பாஜக சார்பில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தால் (பந்த்), கேரள மாநிலம் முழுவதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தமிழக வாகனங்கள் மாநில எல்லையில் நிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டன.

    கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் கே.எம். மணி, ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் நிதியமைச்சராக உள்ள இவர், கேரளாவில் மதுக்கூடங்களை நடத்த மீண்டும் அனுமதி அளிப்பதற்காக, லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எனவே,அவர் நிதியமைச்சர் பதவியிலிருந்து உடனே பதவி விலக வேண்டுமென மாநில பா.ஜக சார்பில், செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது.

    பந்த்துக்கு ஆதரவு: இதனால், கேரளா மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள், ஜீப்புகள் உள்பட வாகனங்கள் ஓடவில்லை, ஹோட்டல்கள், கடைகள், பெட்ரோல் பங்க்குகள் உட்பட அனைத்து கடைகள், வியாபார நிறுவனங்கள் முழுவதும் மூடப்பட்டிருந்தன.

    இதேபோல், கல்லூரிகள், பள்ளிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகளும் மூடப்பட்டிருந்தன. சுற்றுலா தலங்களான தேக்கடி, மூணாறு பகுதிகளில், முன்பதிவு செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் கேரள சுற்றுலாத் துறையின் படகுகள் இயக்கப்படவில்லை.

    தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம்: எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோட்டயம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகளும், கம்பத்திலிருந்து இடுக்கி மாவட்டம் கட்டப்பனை, நெடுங்கண்டம், மூணாறு, வண்டிப்பெரியாறு, ஏலப்பாறை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகளும் தமிழக எல்லைகளில் நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன. கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தமிழகத்திற்கு வரும் அனைத்து அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

    தோட்ட தொழிலாளர்கள்: கம்பம், கூடலூர், உத்தமபாளையம், தேவாரம், போடி, கோம்பை, பண்ணைப்புரம் உட்பட அனைத்து பகுதிகளில் இருந்தும் இடுக்கி மாவட்டத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை.

    இந்த போராட்டத்தால், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர். பந்த் அமைதியாக நடந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai