Enable Javscript for better performance
தனி மாநில அந்தஸ்து விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு புதுவை காங்கிரஸ் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    தனி மாநில அந்தஸ்து விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு புதுவை காங்கிரஸ் கண்டனம்

    By dn  |   Published on : 28th January 2015 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனி மாநில அந்தஸ்து தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் புதுவை மக்களை ஏமாற்றி வருகின்றன என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    மாநில செய்தித் தொடர்பாளர் ஏவி.வீரராகவன் வெளியிட்ட அறிக்கை:

    புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து தரும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். பலமுறை இக்கோரிக்கைத் தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். ஆனால் மத்திய அரசு இப்பிரச்னையில் மெளனமாக உள்ளது என புகார் கூறி உள்ளார்.

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க.வும், என்.ஆர். காங்கிரஸூம் கூட்டணி சேர்ந்து, மோடி பிரதமர் ஆனதும் தனி மாநில அந்தஸ்து தந்து விடுவார் என பிரசாரம் செய்தனர்.

    நிதி நெருக்கடி உள்பட அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து விடும் எனத் தெரிவித்தனர். பா.ஜ.க. மேலிட நிர்வாகிகளும் இதுகுறித்து வாக்குறுதி அளித்தனர். ஆனால் தற்போது முதல்வர் மத்திய அரசு மீது புகார் கூறியுள்ளார். மாநில அந்தஸ்து கிடைக்கும் என நினைத்து அக்கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்களித்தனர். இதற்கு ராதாகிருஷ்ணன் எம்.பி. என்ன பதில் கூறப்போகிறார்? என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai