Enable Javscript for better performance
தமிழகம் முழுவதும் 112 கல்லூரிகளில் தொழில்முனைவோர் விழிப்புணர்வுப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    தமிழகம் முழுவதும் 112 கல்லூரிகளில் தொழில்முனைவோர் விழிப்புணர்வுப் பயிற்சி

    By dn  |   Published on : 28th January 2015 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் 112 கல்லூரிகளில் தொழில்முனைவோர் விழிப்புணர்வுப் பயிற்சி நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து 112 கல்லூரிகளில் தொழில் முனைவோர் விழிப்புணர்வுப் பயிற்சியை நடத்த உள்ளது. இந்தப் பயிற்சியானது, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அகாதெமி மூலமாகச் செயல்படுத்தப்படும். செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்படும் இந்தப் பயிற்சியானது, 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் மாணவர்களைச் சென்றடையும் விதமாக, மூன்று கட்டங்களாக நடத்தப்படும். முதல்கட்ட பயிற்சி அரை நாளும், இரண்டாவது கட்ட பயிற்சி ஒரு கல்லூரிக்கு 20 மாணவர்கள் வீதம் 5 நாள்களும் நடைபெறும்.

    இந்தப் பயிற்சியின் போது, புதிய வியாபார உத்திகள், தொழிலை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஆகியன குறித்து விளக்கப்படும். மேலும், இணையதளம் மூலமாக மாணவர்களின் செயல்பாட்டுத் திறன் ஆய்வு செய்யப்படும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 224 மாணவர்கள் 3-ஆவது கட்ட பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர். அவர்கள், சென்னையிலுள்ள முக்கிய தொழில் முனைவோர்கள், முதலீடு செய்பவர்கள் ஆகியோரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

    மூன்று கட்ட தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வுப் பயிற்சியானது முதல் முறையாக தமிழகமெங்கும் உள்ள கல்லூரிகளில் நடைபெறுகிறது. மேலும், எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளைச் சேர்ப்பதற்கான திட்டமும் விரிவுபடுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai