Enable Javscript for better performance
மனைவி உள்பட 5 பேர் கொலை: ராணுவ வீரர், தம்பி, தாய் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம், பேரையூர் அருகே மனைவி, மாமனார் உள்பட அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்த வழக்கில், ராணுவ வீரர், அவரது தாய், தம்பி ஆகியோர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    மனைவியின் குடும்பத்தினர் தன்னை கேலி செய்ததால் அவர்களை வெட்டிக் கொன்றதாக கைதான ராணுவ வீரர் கமலக்கண்ணன் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    பேரையூர் அருகே உள்ள ஏ. தொட்டிபட்டியை சேர்ந்த பொன்.ராமலிங்கம் மகன் கமலக்கண்ணன். ராணுவ வீரரான இவருக்கும், மங்கள்ரேவு கிராமத்தைச் சேர்óந்த சின்னச்சாமி மகள் கோமதிக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

    இதனிடையே, தொட்டியபட்டியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற உறவினர் இல்ல நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சின்னச்சாமி சென்றார். அங்கு கமலக்கண்ணனின் சகோதரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், கமலக்கண்ணன், தனது சகோதரர் பரமசுந்தருடன் சேர்ந்து சின்னச்சாமி, அவரது மனைவி ராமுத்தாய், மகள்கள் பாக்கியலட்சுமி, கோமதி, வனரோஜா ஆகியோரை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தார்.

    பின்னர், கமலக்கண்ணனும், பரமசுந்தரும் நாகையாபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். போலீஸில் அவர் அளித்த வாக்குமூலம் குறித்து காவல் துறையினர் கூறியதாவது:

    ""2008-இல் கோமதியுடன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் 4 மாதங்களிலேயே பிரிந்து விட்டோம். விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினோம். அதன்படி, கோமதிக்கு ஜீவனாம்சமாக மாதம்தோறும் ரூ.6,100 அளித்து வருகிறேன்.

    ஆனால் கோமதி, என்னுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக நீதிமன்றத்தில் மனு செய்து அனுமதி உத்தரவையும் பெற்றார். இருப்பினும், உண்மையில் கோமதி என்னுடன் சேர்ந்து வாழ மறுத்தார்.

    இதனால், கோமதி பெற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளேன். இதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.

    மாமனார் சின்னச்சாமி ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால், என் மீது புகார் தெரிவித்து நான் பணிபுரியும் பிரிவுக்கு மனு அனுப்பினார். இதையடுத்து என் மீது விசாரணை நடத்தப்பட்டது. இதனால், மனரீதியாக பாதிக்கப்பட்ட நான் விடுமுறையில் ஊருக்கு வந்தேன்.

    இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வந்த மாமனார் குடும்பத்தினர் என்னை கேலி செய்வதுபோல நடந்து கொண்டனர். இதைத் தட்டிக்கேட்ட எனது சகோதரியைத் தாக்கினர்.

    இதனால், ஆத்திரமுற்ற நான் அவர்களை தாக்கிக் கொன்றேன்'' என கமலக்கண்ணன் தெரிவித்தனர்.

    இச் சம்பவத்தில் நாகேஸ்வரி என்பவர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளார். அவரது சகோதரர் லோகநாதன் கொடுத்த புகாரின்பேரில் கமலக்கண்ணன், பரமசுந்தர், அவரது தாய் ஆகியோர் மீது 11 பிரிவுகளின் கீழ் நாகையாபுரம் போலீஸார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai