Enable Javscript for better performance
வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான கைதிக்கும், போலீசார் இடையே மோதல்- Dinamani

சுடச்சுட

    

    வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான கைதிக்கும், போலீசார் இடையே மோதல்

    By கிருஷ்ணன்  |   Published on : 28th January 2015 06:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெடி பொருட்களை வீட்டில் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜரான ஆயுள்தண்டனை கைதிக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கைதிக்கு காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கும்பகோணம் மாதுளம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணி என்கிற சின்னமணி(29).கடந்த 2012ம் ஆண்டு கோயம்புத்தூர் பீலமேடு பகுதியில் இரண்டு கொலை நடந்தது. இந்த இரண்டு கொலை வழக்கில் சின்னமணியை போலீசார் தேடியபோது அவர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து கோயம்புத்தூர் போலீசார் கும்பகோணம் மாதுளம்பேட்டை பகுதியில் உள்ள வீட்டில் சின்னமணியை இங்கு மேற்கு போலீசார் உதவியுடன் பிடித்தனர். அப்போது வீட்டில் நடந்த சோதனையில் சின்னமணி வீட்டில் டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் ஆகிய வெடி பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கைப்பற்றிய  மேற்கு போலீசார் மணி என்கிற சின்னமணி மீது வெடி பொருட்கள் வைத்திருந்ததாக தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையில் கோவையில் நடந்த இரண்டு கொலை வழக்கில் கோவை நீதிமன்றம் சின்னமணிக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்திருந்தது. இதையடுத்து அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் வெடிபொருட்களை வீட்டில் வைத்திருந்ததாக  மேற்கு போலீசாரால் தொடரப்பட்ட வழக்கில் சின்னமணியை காவல் நீட்டிப்புக்காக கோவையிலிருந்து செந்தில்குமார்,சரவணன், சந்துருபாலாஜி ஆகிய மூன்று போலீசார்கள் பலத்த ஆயுத பாதுகாப்புடன்  நீதிமன்றத்திற்கு புதன்கிழமை  அழைத்து வந்தனர்.

    அவரை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பூரண ஜெய ஆனந்த் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். பின்னர் காவல்நீட்டிப்பு செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது சின்னமணிக்கும், அந்த போலீஸிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சின்னமணிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த  போலீஸ் டி.எஸ்.பி. கணேசமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் மகாதேவன், ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். விசாரணையில் அந்த கைதி தான் தவறி கீழே விழுந்து விட்டதால் ஏற்பட்ட காயம் என தெரிவித்தார். இதையடுத்து  சின்னமணிக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவைக்கு போலீசாருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai