Enable Javscript for better performance
வேலுநாச்சியார், மருதுபாண்டியர்களின் வாழ்க்கை வரலாற்றை வட மாநில பாடத் திட்டங்களில் சேர்க்க குரல் கொடுப்பேன்: எம்.பி. தருண் விஜய்- Dinamani

சுடச்சுட

    

    வேலுநாச்சியார், மருதுபாண்டியர்களின் வாழ்க்கை வரலாற்றை வட மாநில பாடத் திட்டங்களில் சேர்க்க குரல் கொடுப்பேன்: எம்.பி. தருண் விஜய்

    By dn  |   Published on : 28th January 2015 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kur_thirukural

    வேலுநாச்சியார், மருதுபாண்டியர்களின் வரலாற்றை வட மாநில பாடத் திட்டங்களில் சேர்க்க குரல் கொடுப்பேன் என்றார் தருண் விஜய் எம்.பி.

    கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் உருவச் சிலையை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து, பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் பேசியது:

    திருக்குறளில் இல்லாத கருத்துகளே இல்லை எனக் கூறலாம். அரசியல், நாட்டை ஆளும் பண்பு உள்ளிட்ட ஏராளமான கருத்துகள் உள்ளன.

    திருக்குறள், திருவள்ளுவர், சுப்ரமணிய பாரதி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், சேர, சோழ, பாண்டியர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறாமல் இந்தியா முழுமைப் பெறாது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வாகனங்களில் ஒரு திருக்குறளை எழுதி வைக்க வேண்டும். திருக்குறளுக்கு சொந்தமானவர்கள் நீங்கள் என்று பெருமிதம் கொள்ள வேண்டும்.

    கல்வித் திட்டத்தில் திருக்குறளை சேர்க்க வேண்டும். தினமும் ஒரு குறளையாவது படித்தால் புதிய தமிழகமும், புதிய இந்தியாவும் உருவாகும். என் உயிர்மூச்சு உள்ளவரை திருக்குறளின் மேன்மையை உலகம் முழுவதும் பரவச் செய்வேன் என்றார்.

    முன்னதாக, கரூர் மாவட்ட திருக்குறள் அமைப்புகள், ஆர்வலர்கள் இணைந்து நடத்திய வரவேற்பு விழாவில் பேசிய அவர், வட இந்தியர்கள் மத்தியில் சுதந்திரத்திற்காக போராடிய பெண்மணிகளில் ஜான்சிராணியை மட்டும்தான் தெரியும். ஆனால், தென்னாட்டிலே பாடுபட்ட வேலுநாச்சியார், மருதுபாண்டியர்கள் ஆகியோரை பற்றித் தெரியாது. வட மாநில பாடத் திட்டங்களில் இவர்களின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க குரல் கொடுப்பேன்.

    தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு 1 லட்சம் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்படும். வட மாநில மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிப்பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்படும்.

    திருக்குறளுக்காக மாணவர்கள், இளைஞர்கள் என்ற அமைப்பு தொடங்கப்படும். இந்த அமைப்பில் இணைய விரும்பும் மாணவர்கள், இளைஞர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai