Enable Javscript for better performance
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பணபலத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை: தலைமைத் தேர்தல் அதிகாரி- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பணபலத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை: தலைமைத் தேர்தல் அதிகாரி

    By dn  |   Published on : 28th January 2015 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sandeep_saxena

    ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் பணபலம், படை பலத்தை பயன்படுத்துவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

    இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:

    ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பணியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பழனிக்குமார், பொதுப் பார்வையாளர் பல்கார் சிங், செலவுக் கணக்கு பார்வையாளர் ஸ்ரீதர தோரா, சட்டம்-ஒழுங்கு பார்வையாளர் வினோத் குமார், தேர்தலை நடத்தும் அதிகாரி மனோகரன், 32 மண்டலக் குழுக்கள், 10 பறக்கும் படைகள் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், பொதுமக்கள் புகார் தெரிவிக்க 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி, தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்டவற்றை அணுகலாம்.

    அரசியல் கட்சிகள் தேர்தல் அதிகாரிகள் மீது குறிப்பிடும் குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாது.

    புகார்களின் அடிப்படையில் அரசு கட்டடங்களில் செய்யப்பட்ட 10 தேர்தல் விளம்பரங்களும், தனியார் கட்டடங்களில் செய்யப்பட்டிருந்த 490 சுவர் விளம்பரங்கள், 2 சுவரொட்டிகள், 12 விளம்பரப் பதாகைகள், 19 இடங்களில் கொடிகள் என மொத்தம் 523 விளம்பரங்களும் அகற்றப்பட்டு உள்ளன.

    எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பதற்கான பொத்தான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் இறுதியில் இருக்கும்.

    போலி வாக்காளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கான பிரத்யேக பட்டியல் தயாரிக்கும் பணி, வாக்குப்பதிவுக்கு ஒரு நாளுக்கு முன்பாக முடிக்கப்படும். அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் வாக்களிப்பதில் இருந்து தடுக்கப்படுவார்கள் என்றார் சந்தீப் சக்சேனா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai