Enable Javscript for better performance
100 நாள் வேலைத் திட்டம் முடக்கம்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    100 நாள் வேலைத் திட்டம் முடக்கம்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    By dn  |   Published on : 28th January 2015 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cong

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முடக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் சார்பில் வேலூரில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில அமைப்பாளரும், சென்னை மாநகராட்சி 91-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான பி.வி.தமிழ்ச்செல்வன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

    இதில் பி.வி.தமிழ்ச்செல்வன் பேசியதாவது: ஏழை விவசாயக் கூலிகள் வறுமையில் வாடக் கூடாது என்ற உன்னத நோக்கத்தோடு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2005-இல் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை படிப்படியாக முடக்கி, ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

    தேசிய அளவில் 625 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை 200-ஆக குறைக்கவும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியைத் தடுக்காவிடில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இத்திட்டம் இல்லாமல் போகும். தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் சூழலைத் தடுக்க காங்கிரஸ் முழுமூச்சுடன் போராடும் என்றார்.

    இதில் வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் வி.நாகேஷ், வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.சக்தி, வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.டி.எம்.சுரேஷ்குமார், சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai