Enable Javscript for better performance
சாந்தி ரங்கநாதனுக்கு ஒளவையார் விருது: தமிழக அரசு அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சாந்தி ரங்கநாதனுக்கு ஒளவையார் விருது: தமிழக அரசு அறிவிப்பு

    By dn  |   Published on : 08th March 2015 04:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    santhi_ranganathan

    மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்டு, அவர்களை இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வதற்கான பணியை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வரும் சாந்தி ரங்கநாதனுக்கு நிகழாண்டுக்கான ஒளவையார் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    அவருக்கு சர்வதேச மகளிர் தினத்தன்று ஒளவையார் விருது வழங்கவும், இந்த விருது பெறுபவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ், பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என்று கடந்த 2012-இல் ஜெயலலிதா அறிவித்தார்.

    அதன்படி, மகளிர் தினத்தையொட்டி, கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

    நிகழாண்டுக்கான (2015) ஒளவையார் விருது வழங்க, டி.டி. ரங்கநாதன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் டி.டி.கே. மருத்துவமனை கெளரவச் செயலாளராகவும், சுவாமி தயானந்தா கல்வி மையத்தின் கெளரவச் செயலாளராகவும் பணிபுரிந்து வரும் முனைவர் சாந்தி ரங்கநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai