Enable Javscript for better performance
ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    By DN  |   Published on : 01st November 2015 06:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rain

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    குமரிக் கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ளதால் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதன் காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் இன்று மதியம் 12.30 மணியளவில் தொடங்கிய கனமழையால், சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai