Enable Javscript for better performance
நெல்லை மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை: குடியிருப்புகளுக்குள் வெள்ளம்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை: குடியிருப்புகளுக்குள் வெள்ளம்

    By திருநெல்வேலி,  |   Published on : 05th November 2015 12:18 AM  |   அ+அ அ-   |    |  

    2

    திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை பல்வேறு பகுதிகளிலும் இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
     திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இடி - மின்னலுடன் இந்த மழை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. இதனால், பாளையங்கோட்டை சேவியர் காலனி, வண்ணார்பேட்டை பரணிநகர், சந்திப்பு பாலபாக்யாநகர், மேலப்பாளையம் காயிதேமில்லத் நகர், பாத்திமா நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்தது.
     பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் ஊராட்சியில் கே.டி.சி. நகர் அருகேயுள்ள ரவிசங்கர்நகரில் உள்ள தெருக்களில் மழை நீர் 3 அடி உயரத்துக்கு தேங்கி நின்றது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
     மழையால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் தனியார், அரசுப் பள்ளிகளுக்கு ஆட்சியர் மு. கருணாகரன் விடுமுறை அளித்து உத்தரவிட்டார். கல்லூரிகளில் பல்கலைக்கழகத் தேர்வுகள் நடைபெற்று வருவதால் அவை வழக்கம்போல் இயங்கின.
     புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): பாளையங்கோட்டை 60, திருநெல்வேலி 36, சேரன்மகாதேவி 40, களக்காடு 25.2, நான்குனேரி 59, ராதாபுரம் 24, அம்பாசமுத்திரம் 23.2, ஆலங்குளம் 48.4, கன்னடியன் அணைக்கட்டு 23, மூலைக்கரைப்பட்டி 12.4, தென்காசி 2, செங்கோட்டை 6, ஆய்க்குடி 15.2, பாபநாசம் அணை 3, பாபநாசம் கீழ் அணை 4, சேர்வலாறு அணை 1, மணிமுத்தாறு அணை 18.2, ராமநதி அணை 3, கருப்பாநதி அணை 7, குண்டாறு அணை 11, நம்பியாறு அணை 43, கொடுமுடியாறு அணை 35.
     தூத்துக்குடி மாவட்டத்தில்...: தூத்துக்குடியில் 30.6, ஓட்டப்பிடாரம் 8, மணியாச்சி 21, கயத்தாறு 7, கடம்பூர் 12, கழுகுமலை 8, சாத்தான்குளம் 28.6, திருச்செந்தூர் 7, காயல்பட்டினம் 14, ஸ்ரீவைகுண்டம் 31, விளாத்திகுளம் 2, கீழஅரசடி 1.5.
     நீர்மட்டம்: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 800 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 152 கனஅடியும், கடனாநதி அணைக்கு 63.07 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு 56 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு 25.22 கன அடியும் நீர்வரத்து இருந்தது.
     பாபநாசம் அணை நீர்மட்டம் 1.20 அடி உயர்ந்து 84.25 அடியாகவும் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 98.72 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 25 அடியாகவும் இருந்தது.
     மணிமுத்தாறு அணை - 64.90 அடி, கடனாநதி அணை - 72.50 அடி, ராமநதி அணை - 71.50 அடி, கருப்பாநதி அணை - 70.21 அடி, குண்டாறு அணை - 36.10 அடி, அடவிநயினார் அணை - 103 அடி, வடக்குப் பச்சையாறு அணை - 24.50 அடி, நம்பியாறு அணை - 12.80 அடி.
     வீடுகள் சேதம்: பலத்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருநெல்வேலி நயினார்குளம் நிரம்பி வழிந்தது. அப்பகுதியில் அறுவடைப் பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பெருமாள்புரத்தில் பழமையான 2 மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp