சுடச்சுட

    

    குஷ்பு, நக்மா உருவப்படம் எரிப்பு: தமிழர் முன்னேற்றப் படையினர் போராட்டம்

    By DN  |   Published on : 23rd October 2015 05:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன், நடிகை குஷ்பு, நக்மா உருவப்படங்களை எரித்து தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 67 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி தலைமையில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் குளக்கரை சாலையில் திரண்ட அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    அப்போது போராட்டக்காரர்கள் தமிழக  காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடிகைகள் குஷ்பு, நக்மா ஆகியோரின் உருவபடங்களையும் தீயிட்டு கொளுத்தினர்.

    நேற்று சத்தியமூர்த்தி பவனில் பேட்டி அளித்த இருவரும் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தி பேசியதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 57 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai