சுடச்சுட

  
  4

  கன்னட எழுத்தாளர் எம்.எம்.கலபுர்கி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.
   இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
   சாகித்ய அகாதெமி விருது பெற்றவரும், மிகச் சிறந்த கன்னட எழுத்தாளருமான எம்.எம்.கலபுர்கி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
   மூட நம்பிக்கைகளை எதிர்த்து, தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து வந்தவர் கலபுர்கி. அவரைச் சுட்டுக் கொன்றவர்கள் மீது கர்நாடக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   இலங்கைக்கு போர்க் கப்பல்: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இலங்கை அரசு பல்வேறு இன்னல்களை விளைவித்து வருகிறது. எனினும், இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. தற்போது வராஹா போர்க் கப்பலை இலங்கைக் கடற்படைக்கு இலவசமாக இந்தியா வழங்கியுள்ளது.
   இது கண்டனத்துக்குரியது. அந்தப் போர்க் கப்பலைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai