
நடைபெறவிருக்கும் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனியாக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் தேமுதிக சார்பில் மகளிர் தின விழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசியதாவது:
நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்தே போட்டியிடும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக இளைஞர் அணி நிர்வாகி சுதீஷ் தலைமையில் 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதற்காக என்னை தேடி வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டணி அமைப்பது தொடர்பாக யாரிடமும் பேரம் பேசவில்லை என்றார் விஜயகாந்த்.