தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க பூத் ஸ்லிப் இருந்தாலே போதும், வேறு எந்த ஆவணமும் தேவையில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி, தேர்தலில் வாக்களிக்க பூத் ஸ்லிப்பே போதுமானது. வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை.
ஆனால், வீடு மாறி சென்று விட்டிருந்தாலோ, மதுரையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டிருந்தாலோ, தாங்கள் வாக்களிக்க சொந்த பகுதிக்குச் செல்லும் போது, உங்களது பெயர் குடிபெயர்ந்தவர்கள் பட்டியலில் இருக்கலாம்.
அப்போது, அடையாள அட்டை போன்று வேறு ஆவணங்களை காண்பித்து வாக்களிக்க வேண்டியதிருக்கும். எனவே, வாக்காளர்கள் வாக்களிக்க பூத் ஸ்லிப்பே போதும் என்று லக்கானி தெரிவித்திருப்பது பொதுமக்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.