Enable Javscript for better performance
விருகம்பாக்கத்தில் தமிழிசை போட்டி\\\":பாஜக இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    விருகம்பாக்கத்தில் தமிழிசை போட்டி":பாஜக இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    By புது தில்லி,  |   Published on : 11th April 2016 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tamilisai

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட உள்ளார்.

    கடந்த மார்ச் 25ஆம் தேதி பாஜக தலைமை வெளியிட்ட முதல் பட்டியலில், 54 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில், 30 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலை பாஜக மத்திய தேர்தல் குழுச் செயலர் ஜே.பி.நட்டா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

    இதில், சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்த கரு.நாகராஜன் உள்பட பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வேட்பாளர்கள் விவரம் (அடைப்புக்குறிக்குள் தொகுதியின் பெயர்):

    டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் (விருகம்பாக்கம்); கரு.நாகராஜன் (மயிலாப்பூர்); ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் (திருவள்ளூர்); எம்.ஜெய்சங்கர் (வில்லிவாக்கம்); கிருஷ்ணகுமார் நாதனி (துறைமுகம்); சுரேஷ் கருணா (அண்ணா நகர்); வி.ஜி.ரங்கசாமி (திருப்போரூர்); பொன்ராசா (ஏற்காடு); ஏ.சி.முருகேசன் (சங்ககிரி), கோபிநாத் (சேலம் வடக்கு).

    கிருஷ்ணகுமார் (மொடக்குறிச்சி), என்.சண்முகம் (தாராபுரம்); வி.பி.ஜெகநாதன் (மேட்டுப்பாளையம்); தங்கராஜ் (பல்லடம்); ஆர்.நந்தகுமார் (கவுண்டம்பாளையம்); திருமலை பாலாஜி (திண்டுக்கல்); டாக்டர் எஸ்.பி.சரவணன் (காட்டுமன்னார்கோயில்); சி.முத்துகுமார் (மயிலாடுதுறை); சிவகுமார் (எ) பேட்டை சிவா (மன்னார்குடி), எம்.எஸ்.ராமலிங்கம் (தஞ்சாவூர்).

    புரட்சி கவிதாசன் (கந்தர்வகோட்டை), முத்துலட்சுமி (காரைக்குடி); ஏ.ஆர்.மகாலட்சுமி (மதுரை தெற்கு); ஆறுமுகம் பிள்ளை (திருப்பரங்குன்றம்); ஜி.பார்த்தசாரதி (சிவகாசி); ஆர்.வெற்றிவேல் (அருப்புக்கோட்டை); துரை கண்ணன் (ராமநாதபுரம்); செல்வராஜ் (ஸ்ரீவைகுண்டம்); பி.செல்வி (தென்காசி); கனி அமுதா (ராதாபுரம்).

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai