Enable Javscript for better performance
ஆரத்தி எடுத்தவருக்கு பணம்: முன்னாள் பேரவைத் தலைவர் ஜெயக்குமார் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    ஆரத்தி எடுத்தவருக்கு பணம்: முன்னாள் பேரவைத் தலைவர் ஜெயக்குமார் மீது வழக்கு

    By சென்னை,  |   Published on : 15th April 2016 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    29

    சென்னை தண்டையார்பேட்டையில் ஆரத்தி எடுத்தவருக்கு பணம் வழங்கியதாக தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், ராயபுரம் அதிமுக வேட்பாளருமான டி.ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
     இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ராயபுரம் அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார், கடந்த 9-ஆம் தேதி தண்டையார்பேட்டை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர், தண்டையார்பேட்டை தேனியம்மன் கோயில் தெருவில் பிரசாரம் செய்தபோது, அங்கு ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு அவர் பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
     இது குறித்து அந்தத் தொகுதியின் பறக்கும் படை அதிகாரி ஹரிநாத், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஜெயக்குமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai