Enable Javscript for better performance
உதய் திட்டத்தை ஆதரிக்கச் சொல்லவில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்- Dinamani

சுடச்சுட

    

    உதய் திட்டத்தை ஆதரிக்கச் சொல்லவில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்

    By  சென்னை,  |   Published on : 15th April 2016 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    4

    மத்திய அரசின் உதய் திட்டத்தை நான் ஆதரிக்கச் சொல்லவில்லை என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
     இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
     மத்திய அரசு கொண்டு வந்துள்ள உதய் திட்டத்தில் தமிழக அரசு பங்கு பெறாதது குறித்து ஒரு சில மத்திய அமைச்சர்களும், கருணாநிதியும் தமிழக அரசைக் குறை கூறி வருகின்றனர் என்று ஜெயலலிதா பேசியிருக்கிறார்.
     மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக முதல்வரின் பதில் என்ன என்று கேட்டிருந்தேன். அதைவிடுத்து உதய் திட்டத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ நான் கருத்து எதுவும் கூறவில்லை.
     மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தனது பேட்டியில், தமிழக மின் வாரியத்துக்கு கடந்த ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மின் திருட்டு அதிகரித்து வருகிறது. அப்படி இருந்தும் தமிழகத்தில் மின்சாரத் துறையை நஷ்டத்திலிருந்து மீட்கவும், வருவாயை அதிகரிக்கவும் உதவும் மத்திய அரசின் உதய் எனும் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு முன்வரவில்லை.
     இந்தத் திட்டத்தைப் பின்பற்றும் மற்ற மாநிலங்கள் நல்ல பலனைப் பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களில் செயல்படுத்தியதன் மூலம் 1.80 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. ஆனால், தமிழக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. நியாயமான நுகர்வோர் பயன் பெறுவதைத் தமிழக அரசு விரும்பவில்லை என்றும் மத்திய அமைச்சர் கூறியிருந்தார்.
     இதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டுமென்றுதான் எழுதியிருந்தேன்.
     எனது அறிக்கையில் உதய திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நான் கூறவில்லை.
     இந்தத் திட்டம் பற்றி தற்போது விளக்கம் அளித்துள்ள ஜெயலலிதா, மத்திய அமைச்சர் பேட்டியளித்தவுடன் அப்போதே பதில் கூறியிருக்கலாம். அப்படிப் பதில் கூறியிருந்தால் பிரச்னையே எழுந்திருக்காது. அப்போது அமைதியாக இருந்து விட்டு, இப்போது என் மீது பாய்வது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai