Enable Javscript for better performance
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதில்- Dinamani

சுடச்சுட

    

    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதில்

    By  சென்னை,  |   Published on : 15th April 2016 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    26

    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
     இந்தத் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
     இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தருமபுரியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக அரசுதான் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
     இது உண்மை இல்லை. ரூ.1,334 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு 2008-இல் திமுக ஆட்சியில்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கருணாநிதிதான் அடிக்கல் நாட்டினார்.
     பின்னர் இந்தத் திட்டத்துக்கு அதிக செலவு ஆகும் என்பதால், 2010-இல் திருத்தப்பட்ட நிர்வாக ஒப்புதல் ரூ.1,928 கோடிக்கு திமுக ஆட்சியில்தான் அளிக்கப்பட்டது. அப்போது திமுகவின் ஆட்சி நிறைவு பெறப்போகும் நேரத்தில் 90 சதவீத பணிகளை முடித்திருந்தோம்.
     பிறகு 2011-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக வழக்கம்போல இந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டது. மக்கள் பயன்பெறும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் என்ன தயக்கம் என்று நான் பலமுறை கேள்வி எழுப்பிய பிறகுதான், வேறு வழியின்றி அவசர அவசரமாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றியதாக அதிமுக கணக்கு காட்டியது.
     எனினும், முழுமையாகப் பணிகளை முடிக்காமல் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் எனபதே உண்மை என்று அவர் கூறியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai