Enable Javscript for better performance
ஓரிரு நாளில் புதிய தமிழகம் வேட்பாளர் பட்டியல்: கிருஷ்ணசாமி- Dinamani

சுடச்சுட

    

    ஓரிரு நாளில் புதிய தமிழகம் வேட்பாளர் பட்டியல்: கிருஷ்ணசாமி

    By  கரூர்,  |   Published on : 15th April 2016 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றார் அக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை மாயனூரில் நடைபெற்ற அக்கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
     இந்த தேர்தல் மூன்று அம்சங்களை கொண்டது. ஒன்று திமுகவின் பலம் வாய்ந்த கூட்டணி, இரண்டாவது தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவது, மூன்றாவது திமுகவின் தேர்தல் அறிக்கை. இவை மூன்றும் திமுக கூட்டணிக்கு வெற்றியை தேடி தரும்.
     திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையை வீடுவீடாக கொண்டு சென்றாலே வெற்றி பெறலாம். அதிமுக பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கிறது. ஆனால், பணம் இந்தத் தேர்தலில் எடுபடாது, மக்கள் ஏமாற மாட்டார்கள், மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 25,000 முதல் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai