Enable Javscript for better performance
கருணாநிதி - மு.க.அழகிரி சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    
    28

    திமுக தலைவர் கருணாநிதியை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வியாழக்கிழமை சந்தித்தார்.
     சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை மு.க.அழகிரி அவரது குடும்பத்தாருடன் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
     பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.அழகிரி, தற்போது எந்த நிலைப்பாடு தொடர்பாகவும் கருத்துச் சொல்ல மாட்டேன் என்றார்.
     அழகிரி வந்து சென்ற அடுத்த சில மணி நேரத்தில் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் வந்தார். அவரும் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியது:
     மு.க.அழகிரி அவரது தந்தையைச் சந்தித்துச் சென்று உள்ளார். இது, அரசியல் சந்திப்பு இல்லை என்றார்.
     திமுக சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட பலர் கருணாநிதியைச் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்துப் பெற்றனர். தமாகாவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸும் கருணாநிதியை வியாழக்கிழமை சந்தித்தார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai