Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ. 104 உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.104 அதிகரித்து, ரூ.22,160-க்கு விற்பனையானது. சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களினால் தங்கத்தின் விலையில் ஸ்திரத்தன்மை இல்லாமல், ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
     இந்நிலையில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 13 அதிகரித்து, ரூ. 2,770-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலையில் தொடர்ந்து மூன்று நாள்களாக மாற்றம் ஏற்படாமல் கிராம் ரூ. 41.20-க்கு விற்பனையானது.
     வியாழக்கிழமை
     விலை நிலவரம் (ரூபாயில்):
     ஒரு கிராம் தங்கம் 2,770
     ஒரு பவுன் தங்கம் 22,160
     ஒரு கிராம் வெள்ளி 41.20
     ஒரு கிலோ வெள்ளி 38,495
     புதன்கிழமை
     விலை நிலவரம்(ரூபாயில்):
     ஒரு கிராம் தங்கம் 2,757
     ஒரு பவுன் தங்கம் 22,056
     ஒரு கிராம் வெள்ளி 41.20
     ஒரு கிலோ வெள்ளி 38,495

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai