Enable Javscript for better performance
தமிழக தேர்தல்: இதுவரை ரூ.23.36 கோடி ரொக்கம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    
    cash1

    சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடைமுறை தொடங்கியதிலிருந்து ஏப்ரல் 13 ஆம் தேதி வரை ரூ. 23.36 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, பறக்கும்படையினர்  ஏப்ரல் 12 ஆம் தேதி மேற்கொண்ட சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்  சென்றதில், நீலகிரி மாவட்டத்தில் ரூ.2.12 லட்சம், தூத்துக்குடியில் ரூ.4.18 லட்சம், சேலம் மாநகரில் ரூ.2.25 லட்சம், சேலம் மாவட்டத்தில் ரூ.11 லட்சம் என மொத்தம் ரூ.26,18,970/- ரொக்கமும்,

    ஏப்ரல் 13 ஆம்தேதி சோதனையில் ரூ.1.41 லட்சம் மதிப்புள்ள 470 சிமெண்ட் மூட்டைகள் வேலூரிலும், ரூ.1.50 லட்சம் விருதுநகரிலும், ரூ.1.45 லட்சம் திருப்பூரிலும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுபோன்று நிலையான கண்காணிப்புக்குழு சோதனை மேற்கொண்ட போது, ஏப்ரல் 12 ஆம் தேதி கரூரில் ரூ.31.50 லட்சம், விழுப்புரத்தில் ரூ.2 லட்சம், வேலூரில் ரூ.16 லட்சம், மதுரையில் ரூ.1.98 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், சென்னை மாநகரில் ரூ.16 லட்சம், தேனி மாவட்டத்தில் ரூ.8.39 லட்சம் உட்பட மொத்தம் ரூ.1,04,23,433/- தொகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஏப்ரல் 13 ஆம் தேதி சோதனையில் வேலூரில் ரூ.3.55 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.5.68 லட்சம்  மதிப்பிலான 284 அரிசி மூட்டைகள், நாகப்பட்டினத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புடவைகள்,  பட்டாசுகள், மதுரையில் ரூ.4 லட்சம் மதிப்பில் 7976 ஜதை செருப்புகள் உட்பட மொத்தம் ரூ.13.80  லட்சம் ரொக்கமும் மற்ற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலானதில் இருந்து, ஏப்ரல் 13 ஆம் தேதி வரை ரூ.14,13,21,452/- ரொக்கம் கண்காணிப்புக் குழுவினராலும் ரூ.9,22,46,800/- ரொக்கம் பறக்கும்  படையினராலும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை வரை 2,94,151 புகார்கள் பெறப்பட்டு, 2,85,467 புகார்களில் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. விதிகளை மீறி வாகனத்தில் விளம்பரம் செய்ததாக 1072 வழக்குகளும், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தாக 1342 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai