Enable Javscript for better performance
நாட்டைக் காப்பதோடு உலக அமைதிக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்: குடியரசுத் தலைவர் - Dinamani

சுடச்சுட

    

    நாட்டைக் காப்பதோடு உலக அமைதிக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்: குடியரசுத் தலைவர்

    By பேட்ரிக்  |   Published on : 15th April 2016 06:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    president

    நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வில்லிங்கடன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் இன்று நடைபெற்ற 71-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார்.

    இந்தியாவின் 25 நட்புறவு நாடுகளைச் சேர்ந்த 35 அதிகாரிகளுக்குப் பட்டங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரோசய்யா, வில்லிங்டன் ராணுவ கண்மான்டன் கடியோக் ஆகியோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பேசும் போது,

    பயிற்சி பெரும் ராணுவ அதிகாரிகள் தரைப்படை, கப்பற்படை, விமானப்படை மூன்றையும் ஒருங்கிணைத்துச் செல்லும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செயல்படுவதாலேயே 1976-ம் ஆண்டில் பங்களாதேஷ் என்ற நாட்டை நம்மால் உருவாக்க முடிந்தது. அதனால் போர் பயிற்சி மட்டும் இன்றி, போர் தந்திரங்களையும், நிர்வகிக்கும் திறனையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இதற்காகத் தில்லியில் இருந்து வில்லிங்டன் வந்து, அங்கிருந்து எலிக்காப்டர் மூலம் நீலகிரிக்குப் பயணித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai