Enable Javscript for better performance
புதுச்சேரி: 16 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி: 16 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 15th April 2016 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்கட்டமாக 16 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
     புதுவை பாஜக சார்பில் மொத்தம் 142 பேரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் அவர்களிடம் நேர்காணலும் நடைபெற்றது.
     இந்த நிலையில், பாஜக தலைமை 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.மண்ணாடிப்பட்டு -ஆர்.சரவணன், ஊசுடு (தனி) -சரவணகுமார், வில்லியனூர் -எஸ்.மோகன்குமார், உழவர்கரை -எம்.கே.அகிலன், தட்டாஞ்சாவடி -பி.சிவானந்தன், காமராஜர் நகர் -எஸ்.ரவிச்சந்திரன், லாஸ்பேட்டை -வி.சாமிநாதன், முத்தியால்பேட்டை -டி.சிவக்குமார், ராஜ்பவன் - என்.புகழேந்தி, முதலியார்பேட்டை -வி.செல்வன், மணவெளி -தங்கவிக்ரமன், நெட்டப்பாக்கம் (தனி) -விஸ்வமோகன், நெடுங்காடு (தனி) -யு.காமராஜ், காரைக்கால் (வடக்கு) -எம்.அருள்முருகன், மாஹே -பி.டி.தேவராஜன், ஏனாம் -ராமதாஸ் கனகலா.
     தற்போது முதல்கட்டமாக 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டணி தொடர்பாக மெளனமாக உள்ளதாலும், பாஜக தனித்து போட்டியிட தயாராகி வருவதாக தெரிகிறது.
     இதுகுறித்து மாநிலத் தலைவர் சாமிநாதனிடம் கேட்டபோது: முதல்கட்டமாக 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை தலைமை அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு பின்னர் அறிவிக்கப்படும். மாநில பொறுப்பாளர் மகேஷ் கிரி எம்.பி. இதுகுறித்து தெரிவிப்பார் என்றார் அவர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai